சேர் .வை. துரைசுவாமி

சேர் .வை. துரைசுவாமி அவர்கள் 1874 ஆம் ஆண்டு ஆனி மாதம் எட்டாம் திகதி வேலணையில் பிறந்தார். இலங்கை வரலாற்றில் அழியாத இடம் பெற்றுள்ள தலைவர்களில் ஒருவர். நாட்டு மக்கள் அனைவராலும் விரும்பப்பட்ட நற்றமிழர் . அவர் ஒரு தேசாபிமானி, சைவாபிமானி, சிறந்த வழக்கறிஞர், சமுகத்தொண்டர், கல்விக்கூடங்கள் பலவற்றின் தாபகர், சைவ வித்தியா விருத்திச் சங்கம், சைவ பரிபாலனசபை, யாழ்ப்பாணச் சங்கம் ஆதியாம் நிறுவனங்களின் தலைவர்.
இலங்கை அரசாங்க சபையின் சபாநாயகராக 1936 முதல் 1947 வரை விளங்கிய ஒரே தமிழ்மகன். ஆறாம் ஜோர்ச் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு மன்னரால் அழைக்கப்பெற்று “சேர்” பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டவர். 1936 முதல் 1947 வரை இலங்கையின் முதல் பிரசையாக விளங்கிய பெருமைக்குரியவர். இலங்கை அரசியல் அரங்கில் 1920 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை முதனிலை வகித்த பெருந்தகை .
நாட்டின் விடுதலைக்கு அஞ்சாது குரல் கொடுத்த அரசியல்வாதி. சிறந்த ஆன்மீகவாதி. யோகர் சுவாமிகளின் பேரன்புக்குரியவர். இத்தகு சிறப்புக்கள் அனைத்தும் ஒருங்கமைந்த பெருமகன்தான் வேலனைத் தாயின் தவப்புதல்வன் சேர் வைத்தியலிங்கம் துரைசுவாமி.
நன்றி – மூலம் – வேலணை இணையம்
Leave a Reply