அருள்மிகு பெரிய நாச்சியார் தேவஸ்தானம் – இடைக்காடு

இது 19 ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் திரு குமரேசரால் தாபிக்கப்பட்டது. பெரிய நாச்சியாரை முதலில் மண்குடிசையில் வைத்து வழிபட்டனர். அதன்பின் 1900 ம் ஆண்டளவில் சுண்ணாம்புக் கட்டடத்தில் வைத்துப் பூசித்து வந்தனர். இடைக்காடு கண்ணகை அம்பாள் பொங்கல் தினத்திற்கு அடுத்த நாள் இதன் பொங்கல் தினமாகும். அன்று மூன்று வளந்துகள் நேர்ந்து மடைப்பண்டமெடுத்து பொங்கிப் படைக்கப்படுகிறது. சித்திரா பூரணை அன்று சித்திரைக் கஞ்சியும் தமிழ் வருடப் பிறப்பன்று மருத்து நீரும் மக்களுக்கு வழங்கப்படுகிறது. 1980 ம் ஆண்டளவில் இக் கோவிலுக்கு கிணறும் மடைப்பள்ளியும் அமைக்கப்பட்டது.