கற்புலத்து மனோன்மணி அம்பாள் கோவில் நந்தாவில் கொக்குவில்

வண்ணார்பண்ணை சிவன் கோவிலுடன் தொடர்புகளை உடையது. ஒல்லாந்தர் காலத்திலேயே கோவிலாக இருந்ததாக கர்ணபரம்பரைக் கதையும் உள்ளது. மூலமூர்த்தி – மனோன்மணி அம்பாள். பரிவார மூர்த்திகள் – பிள்ளையார், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், வைரவர், தினமும் மூன்றுகாலப் பூசை. ஆனி மாதப் பௌர்ணமிக்குத் தீர்த்தம் நடைபெற, 11 நாள் வருடாந்த உற்சவம், சமயப் பிரசங்கங்கள், அன்னதானம், குரு பூசை ஆகியவைகளும் நடைபெற்று வருகின்றன. வாசிகசாலையும் உண்டு.