கலட்டி புனித அந்தோனியார் ஆலயம்

கலட்டி (பருத்தித்துறை) புனித அந்தோனியார் ஆலயம்பருத்தித்துறையில் ஏழு தலைமுறைக்கு முன்னர் இப்பகுதியில் 4ம் குறுக்குத் தெருவில் இருந்து மேற்கே செல்லும் மில் எதிர் ஒழுங்கை ஓரமாக இன்றும் பலா மரம் உள்ள காணியில் குடிசையில் அந்தோனியார் சுருபம் ஒன்று அந்தோனி அவர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. இக்காணிக்கு அண்மையில் கோவில் கிணறு என்று இன்றுவரை அழைக்கப்பட்டுவரும் கிணறு உண்டு. ஒல்லாந்தர் ஆட்சியில் அச்சுறுத்தல் காலத்தில் (1656 – 1796) இங்கு வியாபாரி போல வந்த ஒருவரால் கொண்டுவரப்பட்ட சுருபம் பயத்தினால் இக்கிணற்றில் போட நீர் பொங்கி எழுந்தது என வரலாறு உண்டு. கலட்டி புனித அந்தோனியார் கோயிலைப் பராமரித்த வளவார் கட்டட சிற்பகலைஞராக இருந்தபடியால் சுண்ணாம்புக் கற்களால் 4 ம் குறுக்குத் தெருவில் கட்டினார். பின்னர் மறைந்த கட்டடக்கரைஞர் வ. சந்தியாம்பிள்ளை தலைமையில் சீமெந்தினால் 1976 ல் கட்டிமுடிக்கப்பட்டது. மறைந்த அருட்பணி பொனிபஸ் ஆல் 1985 ல் குரு மனையும் மறைந்த அருட்பணி எம். இம்மானுவேல் ஆல் அற்புதர் அரங்கும் கட்டப்பட்டது. வருடார்ந்த திருவிழா யூன் 04 தொடங்கி யூன் 13 நிறைவுறும்.

கலட்டி (பருத்தித்துறை) புனித அந்தோனியார் ஆலயம் கலட்டி (பருத்தித்துறை) புனித அந்தோனியார் ஆலயம்

 

 By – Shutharsan.S

1 review on “கலட்டி புனித அந்தோனியார் ஆலயம்”

  1. Joisan சொல்கின்றார்:

    உங்கள் இணையத்தளத்தில் மேலே உள்ள தலையங்கம் புனித அந்தோனியார் ஆலயம் என்று வரவேண்டும்.
    மேலும் ஆலயத்தின் புகைப்படம் இணைக்க இந்த முகவரியில் தொடர்பு கொள்க. https://www.facebook.com/St.Antonys