அல்வாய் ( சக்கோட்டை) புனித சவேரியார் ஆலயம்.

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் இறுதிக் காலப் பகுதியில் அல்வாய் என்ற இடத்தில் கடற்கரையில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் தெற்கே கத்தோலிக்க கோவில் கட்டப்பட்டிருந்தது. இது சக்கோட்டை புனித சவேரியார் ஆகும்.  இன்றும் இப்பழைய கோவில் அழிந்து போன நிலையில் உள்ளது. 1860 ம் ஆண்டளவில் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் 1903 ம் ஆண்டளவில் கைவிடப்பட்டதென்றும் நல்லூர் ஞானப்பிரகாசர் கூறுகிறார். இதன்பின் சக்கோட்டை கடற்கரையில் புதிய ஆலயம் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாலயம் 2004 ம் ஆண்டு வரை வழிபாட்டுக்கு உரியதாக அமைந்தது. 2008 ல் புதிய திருப்பலி பீடமும் அதற்குரிய அரைக்கோள வடிவமான கூரையும் கட்டப்பட்டது. இப்பணிகளை பங்குத் தந்தை அருட்பணி எம். பத்திநாதர் செய்தார். உற்சவம் மார்ச் மாதம் 04 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மார்ச் மாதம் 13 ம் திகதி முடிவடையும்.

By – Shutharsan.S