சிவன் கோவில் நீர்நொச்சித்தாழ்வு, அரியாலை

1880 ஆம் ஆண்டில் காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட சிவலிங்கம் இங்கு பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. 1881 ஆம் ஆண்டில் சிவன்கோவில் ஒன்றை ஸ்தாபிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் கைகூடாமல் போக இந்தச் சிவலிங்கம் சித்தி விநாயகராலய கொடித் தம்ப மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1955 ஆம் ஆண்டில் முன்னர் சிவன்கோவிலமைக்க முற்பட்ட இடத்தில் கோவிலமைக்கப்பட்டு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்குள்ள சிவலிங்கம் கங்கா நதியால் உருவாக்கப்பட்டது என்பது கர்ண பரம்பரைக் கதையாகவிருக்கிறது. மிகவும் மிருதுவாகவும், பிரகாசமுடையதாகவும், லிங்கம் உள்ளது. பரிவார மூர்த்திகள் – பிள்ளையார், நவக்கிரகாதியோர். தினமும் மூன்று காலப் பூசை. பங்குனி மாதத்தில் பதினொரு தினங்களுக்கு அலங்கார உற்சவம் நடைபெற்று வருகின்றது.