சீரணி நாகபூஷணி அம்பாள் ஆலயம்

இலங்கையில் புகழ்பெற்ற யாழ்ப்பாண நகரத்தில் அமைந்துள்ள பதியில் வாழ் இன்புற்ற வேளாளகுலத்தைச் சேர்ந்த மணியகாரன் உடையார் பரம்பரையினராகிய இராமன் சீரணி என்னும் மண்ணில் சிறப்புற்று வாழ்ந்து வந்தார். ஆவர் மகன் இராமர் அவர் மகன் முருகேசு முத்தர் இனசன வழியில் பெரிய சாஸ்திரியார் தெய்வானைப்பிள்ளை, அன்னப்பிள்ளை, நன்னிப்பிள்ளை, மயில்வாகனம், பெரியபிள்ளை, சின்னப்பிள்ளை, வேலர் ஆகியோருடன் இசைந்து வாழ்ந்து வந்தார். நாகபூசணி அம்பாள் வாலாயம் பெற்ற முருகேசுவிடம் சோமவாரநாள் ஒன்றிலே நாகப+சணி அம்பாள் கனவில் தோன்றி தான் இவ்விடத்தில் சீரணியில் எழுந்தருள வேண்டும் என்றும் தனக்கொரு கோயில் அமைக்கும்படி கேட்டதற்கு அமைய சைவ முறைப்படி ஒரு கொட்டகை அமைத்து அதில் ப+சை செய்து வர வைத்திலிங்கம் அவர்களிடம் ஒப்படைத்தார். இம்முறைப்படி இன சன மக்கள் எல்லோரும் சேர்ந்து வழிபட்டு வந்தார்கள். காலம் காலமாக முருகேசு பரம்பரையினர் பரிபாலித்து வருகின்றனர்.