தம்பாலை அருள்மிகு ஸ்ரீ நாச்சிமார் ஆலயம்

1930ம் ஆண்டளவில் சரவணை தாமு அவர்கள் வேப்பமரத்தடியில் திரிசூலம் வைத்து வழிபட்டு வந்ததாகவும், தலவிருட்ஷம் பட்டபின் 1980ல் மூலஸ்தான மண்டபம் நிறுவி அதில் நாச்சி அம்பாள் , பிள்ளையார், வேல் ஆகிய சொருபங்களை பிரதிஸ்டை செய்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்றதாகவும், 1998ம் ஆண்டு வெளிமண்டபம் கட்டி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றதாகவும் அறியக்கிடக்கின்றது. இது ஆசூசம் தாங்காத தெய்வம் என இப்பகுதி மக்களால் கருதப்படுகின்றது. இதனால் இளம் யுவதிகள் மாதவிடாய் காலத்தில் கோவில் அருகில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்வர்.