தம்பாலை புளியடி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம்

1925ம் ஆண்டளவில் கார்த்தி சின்னப்புவால் இவ் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டு காசியர் பொன்னரால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளதாக மூதாதையர்கள் மூலம் அறியக்கிடக்கின்றது. இதன் தலவிருட்ஷம் இத்தியும், புளியமரமும், ஆனி உத்தரத் திருநாள் இதன் வருடாந்தப் பொங்கல், குளிர்த்தித் தினம் 10.10.2001 அன்று நடைபெற்ற மகாகும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து வருடா வருடம் ஆனி மாதத்தில் அலங்காரத் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. மூலமூர்த்தி – கற்சொரூபம், மடப்பள்ளி – மணிக்கோபுரம், கிணறு, களஞ்சியசாலை, ஒலிபெருக்கி என்பன இத் திருத்தலத்திற்கு உண்டு.