தம்பாலை வெல்வன் அம்பலவானர் சித்தி விநாயகர் ஆலயம் (குடாக்காட்டு பிள்ளையார் கோவில்)

இத்திருத்தலம் கிட்டத்தட்ட 18ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கலாம் என அறியக்கிடக்கின்றது. இத் தலம் அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் இடது பக்கத்தில் அமைந்துள்ளது. அம்பாளின் பிள்ளைகள் இருவரும் அவர் வலது, இடது பக்கங்களில் இருந்து அருள்பாலித்துக்கொண்டிருப்பது

விசேட அம்சமாகும். இடைக்காடு, வளலாய், தம்பாலை, ஆகிய இடங்களிலுள்ள கோவில்களில் இது புராதனமானது. இத் திருத்தலத்தின் ஸ்தாபர்களைச் சரியான முறையில் அறிய முடியாவிட்டாலும் இது அக்காலத்தில் ஒரு பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்கியுள்ளது என்பதற்கு யாழ் கச்சேரி கோவில் பதிவுடாப்பு சான்று பகரும். இத்தலத்தின் பெயர் 1872ம், 1882ம், 1892ம் ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்கில் பதிவுசெய்யப்பட்ட கோவில்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தலவிருட்சம் – புளியமரம், சங்காபிஷேகதினம் – ஜப்பசி திருவாதிரை. சிவஸ்ரீ நா.கந்தசாமி குருக்களை தொடர்ந்து பிரம்மஸ்ரீ க.ஜெயராமகுருக்கள் இக்கோவிலை பூசனை செய்தும் பரிபாலனம் செய்தும் வருகின்றார். இத்தலத்திற்கு மடைப்பள்ளியும் நன்னீர் கிணறும் உண்டு