தம்பாலை ஸ்ரீ ஞான வைரவர் ஆலயம் – சந்நிதி வீதி

சுப்பையர் குடும்பத்தினர் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு இத்தி மரத்தடியில் மூன்று திரிசூலங்களை பிரதிஸ்டை செய்து வழிபட்டு வந்தனர். தலவிருட்சம் ஆகிய இத்தி, அற்ற பின், ஓலைக்கொட்டில் அமைத்து வழிபட்டு வந்தனர். அதன் பின் வைரவ மூர்த்தியை சுண்ணாம்பு கட்டடத்தில் பிரதிஸ்டை செய்து பூசித்தனர். 1958ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வ.கார்த்திகேசு, தி.கந்தசாமி ஆகிய அரு குடும்பத்தினராலும் பராமரித்து வழிபட்டு வரப்படுகின்றது. 1980ம் ஆண்டளவில் இக்கோவில் சீமேந்து கட்டிடம் ஆக்கப்பட்டு கும்பாபிசேகம் நடைபெற்றது. 1985ம் ஆண்டு வைரவமூர்த்தியுடன் விநாயகரையும் பிரதிஸ்டை செய்து மகாகும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதன் வருடாந்த பொங்கலும் குளிர்த்தியும் ஆனி உத்தரத்தன்றாகும்.

2005ம் ஆண்டு தை மாதம் தொடக்கம் இத்திருக்கோவிலை விரிவுபடுத்த பரிவாரமூர்த்திகள் ஆகிய விநாயகருக்கும் முருகனுக்கும் தனித்தனி கோவில்கள் கட்டியும் நிருத்த மண்டபம், மடைப்பள்ளி, கிணறு. சுற்றுமதில் ஆகியவைகளை அமைத்தும் உள்ளனர்.