துண்டி ஞானவைரவர் கோயில்

கோப்பாய் வீதியிலே துண்டிப் பதியில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் வைரவப்பொருமானைத் துண்டி ஞானவைரவ சுவாமி என்ற திருநாமங் கொண்டு பணிகிறார்கள். துண்டி விசேடம் பெற்றது.

சைவபிரசங்கங்கள் புராணபடனங்கள் அந்தக் காலத்தில் ஒழுங்காக நடைபெற்றன. இப்பொழுதும் நடைபெறுவதுண்டு. நேரந் தவறாமல் வைரவர் கோயில் மணி அதிகாலை ஐந்து மணிக்கு ஒலிக்கும். அந்த மணியோசை ஊரையே குதூகலிக்க வைக்கும். மக்கள் வழிபாட்டுடன் தங்கள் தங்கள் நாளாந்தக் கடமைகளையும் மேற்கொள்வதற்கு வழிசெய்வது இந்த மணி ஓசை. ஆசுகவி கல்லடி வேலுபிள்ளை, இயலிசை வாரிதி பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐயர், கவிஞர் சோ பத்மநாநன் முதலான அறிஞர் பெருமக்கள் ஞானவைரவசுவாமி மீது பாடப்பெற்ற பாடல்கள் நூலுருவம் பெற்றுள்ளன.

பிரயாணிகளின் பிரியமான வழிபாடுகளை ஏற்று அவர்களுக்கு எல்லாம் நல்ல வழிகாட்டுகின்றார் ஞானவைரவர் சுவாமி.

 

நன்றி – ஆக்கம்- ஆசிரியமணி திரு அ பஞ்சாட்சரம்

மூலம்- உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பவளவிழா மலர் – 1992

http://www.eurumpirai.comஇணையம்