தும்பளை லூத்து மாதாகோயில்

பாரம்பரியமான இக்கத்தோலிக்க தேவாலயம் கத்தோலிக்கர் மத்தியில் மாத்திரமல்லாது இப்பிரதேசத்தில் வாழுகின்ற சைவ அபிமானிகளது நம்பிக்கைக்கும் உரிய தேவாலயமாக விளங்குகிறதென அவ்வூர் மக்கள் கருதுகின்றனர். பருத்தித்துறைப் பிரதேசத்தின் ஏனைய பகுதிகளிலும் கத்தோலிக்க புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளன. அவை பொதுப்பட வேதக்கோயில்கள் என அழைக்கப்படுகின்றன.