நயினை நாகபூசனி அம்மன்

நயினை நாகபூசனி அம்மன்


நெடுந்தீவுக்கு மிக அண்மையிலுள்ள தீவு நயினாதீவு ஆகும். இத் தீவானது நெடுந்தீவிலிருந்து கிட்டத்தட்ட ஐந்து மைல் தொலைவிலுள்ளது. இத்தீவிற்கு நாகதீவு, நயினாதீவு, நாகநயினாதீவு, மணிபல்லவத் தீவு, மணித்தீவு, நாகேஸ்வரம், மணிபல்லவம், நாகதீபம் எனப் பல பெயர்களுண்டு. இச்சிறு தீவானது சரித்திரப் பெருமை வாய்ந்தது. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களில் மணிபல்லவம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு ஈழப் பிரசித்தி பெற்ற நாகபூசணி அம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. இதன் உற்சவ காலங்களில் இலங்கையின் எல்லாப் பாகங்களிலிருந்து மக்கள் வந்து அம்பாளைத் தரிசித்து அருள் பெற்றுச் செல்வார்கள். அம்பாளின் ஆலயத்திருவிழாக் காலங்களில் மக்கள் மோட்டார் படகுகளிலும் வள்ளங்களிலும் வத்தைகைளிலும் தினமும் பெருந்திரளாக வந்து வணங்கிச் செல்வது வழமையான நிகழ்வாகும். ஆழ்கடலில் பிரயமணம் செய்யும் நெடுந்தீவு மக்கள் பிரயாணம் செய்யும் வேளைகளிலேல்லாம் அம்பாளின் அருள்வேண்டி கோபுரத்தைப் பார்த்தே வணங்கிச் செல்வர். அம்பாளின் அருளினால் இதுகாலவரை கடற் பிரயாணத்தினால் நெடுந்தீவு மக்களுக்கு எந்த இடையூறுகளும் ஏற்படவில்லை.