புனித மரியாள் பேராலயம்

யாழ். மறைமாவட்டத்தின் 51 பங்குகளில் தலையாய கோவில், ஆயர் வதியும் மறை மாவட்ட புனித பேராலயம். ஒல்லாந்தர் காலத்தில் 1789 ற்கு முன் சிறு கொட்டிலாக இருந்த ஆலயம். சங்கிலியன் மகன் கிறிஸ்தவனாக மாறியதற்காக கொல்லப்பட்ட இடம் இது என பழைய மரபுண்டு. இது கோவைக் குருக்கள் கட்டிடக்கலை பாணியில் இருபந்தங்களும் தாழ்ந்து சுவர்கள், நடுவில் இரு வரியில் மரத்தூண்களால் அமைக்கப்பட்டது. 1794 திறக்கப்பட்டது. லெயனாடோ றிபேரோவின் இக்கட்டிடம் 1868 க்கும் 1883 இடையில் செவாலியர் சவிரிமுத்து முதலியாரால் புதுப்பிக்கப்பட்டது. போர்த்துக்கேயர் பாணியில் வடிவமைக்கப்பட்ட இக்கோவிலின் கொஞ்சேஞ்சி மாதா திருச்சுருபம் 1815, 1855, 1877 கொள்ளை நோய்கள் காலத்தில் பெரிய புதுமைகளை ஆற்றியது திருப்பணியில் கொண்டு

செல்லப்பட்ட பொழுது போர்த்துக்கேய கால பாசுகளும் வருடாவருடம் யேசுவின் பாடுகளாக பொம்மைகளைக் கொண்டு கட்டப்பட்டது. இப்போ உள்ள புதிய ஆலயம் 1948 ல் ஆரம்பிக்கப்பட்டு 1990ல் முடிக்கப்பட்டது. யாழ் மாவட்டத்தில் ஆயர் அமர்ந்திருந்து வழிபாடுகள் செய்யக்கூடிய வசதி இவ்வாலயத்தில் மட்டுமே உள்ளது. இதனால் இவ்வாலயம் ஆசனக்கோயில் என்றும் அழைக்கப்படுகின்றது.

—–நன்றி அருட்தந்தை ஜெயசீலன்—-