மயிலிட்டி முருகன் கோவில்

மயிலிட்டி பிரதேசத்தில் பிரபலமான ஆலயங்களில் இந்த முருகன் கோவிலும் ஒன்று. யாழ்ப்பாணத்தை கடைசியாக ஆண்ட சங்கிலிய மன்னன் காலத்தில் இப்பகுதியை மூன்று தேவர்மார்கள் பராமரித்து வந்ததாகவும் அவர்கள் வீரமாணிக்க தேவர், பெரிய மாணிக்க தேவர், நரசிம்ம தேவர் ஆவர். இவர்கள் காலத்தில் கட்டப்பட்டதென நம்பப்படுகிறது. தற்போது உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ளதால் மக்கள் வழிபாட்டிற்கு செல்ல முடியாது உள்ளது. அத்துடன் சிதைவடைந்த நிலையிலும் உள்ளது.

நன்றி : மயிலிட்டி இணையம்