வண்ணை வைத்தீஸ்வரன் கோவில் (பட்டினம் சிவன் கோவில்)

இந்த ஆலயம் கி.பி. 1790 ஆம் ஆண்டு வைத்தியலிங்கச் செட்டியாரால் ஸ்தாபிக்கப்பட்டது. நித்திய நைமித்தியம் சிறப்புற நடைபெற நிபந்தனைகள் அமைக்கப்பட்டன. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், ஸ்ரீலஸ்ரீ ஸ்வாமிநாத தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் ஆகியோர் முதன் முதல் இந்த ஸ்தலத்திலே பிரசங்கம் செய்தார்கள். பங்குனி உத்தரத்தை அந்தமாகக் கொண்டு இருபத்தொரு நாள் சிவன் திருவிழாவும், ஆடிப்பூரத்தை அந்தமாகக் கொண்டு அம்பாள் உற்சவமும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாணப் பட்டினத்தில் பஞ்சரதங்களில் பஞ்சமூர்த்திகளும் தேர்த் திருவிழாவன்று வீதிகளில் பவனிவரும் காட்சி பன்னெடுங்காலமாக இடம்பெற்று வருகின்றது. தினமும் ஆறுகாலப் பூஜை உண்டு. நித்திய நைமித்திய வழிபாடுகள் தென்னகத்து வைத்தீஸ்வரன் கோவில் முறைகளை அனுசரித்து கிரமமாக நடைபெறுகின்றன. அம்பாள் நாமம் ஸ்ரீ பாலாம்பிகா தேவி நால்வர் உட்படப் பிரதான மூர்த்திகள் அனைவரும் ஆலயத்தில் பிரதி~;டை செய்யப்பட்டிருக்கின்றனர். தலவிருட்சம் வன்னி தீர்த்தம் சித்தாமிர்த புட்கரணி, தற்பொழுது, இராஐகோபுரமும்  நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.