வல்வெட்டித்துறை புனித செபஸ்தியார் ஆலயம்

தற்போதுள்ள புனித செபஸ்தியர் ஆலயம் கட்டப்பட முன்னர் கொட்டிலாக இருந்த கோயிலை 1780 ம் ஆண்டில் சிறிய கற்களால் கட்டியதென்றும் தற்போதுள்ள சுண்ணக் கற்களாலும் சாந்தினாலும் அழகான கோவில் 1890 ம் ஆண்டின் பின் கட்டப்பட்டதென்றும் கூறப்படுகிறது. இவ்வாலயத்தின் திருவிழா ஜனவரி 20 ம் திகதி நடைபெறும்.