வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ ஷண்முகநாதசுவாமி

இவ்வாலயம் பரிபூரணம் அடைந்த ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாததேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளால், திருஞானசம்பந்தர் ஆதினம் ஆரம்பிக்கப்பட்ட போது ஸ்தாபிக்கப்பட்டது. மூலமூர்த்தியாக ஸ்ரீ ஷண்முகர் வீற்றிருக்க பரிவார மூர்த்திகளாக விநாயகர், சிவன், அம்மன், மீனாட்சி சுந்தரேசர், தண்டாயுதபாணி, சுவாமிநாதர், ராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி, அபிராமி, பத்திரகாளி, வைரவர், சண்டேஸ்வரர், சேக்கிழார் ஆகியோர் உளர். நித்தியபூசை 4 காலங்களுக்கு நடைபெறுகின்றது.

வார உற்சவமாகச் சுக்கிரவார உற்சவம் உளது. சுக்கிரவாரத்திலும் பௌர்ணமியிலும் சக்தி பூசை இங்கு சிறப்புற நடைபெறுகின்றது. மாத உற்சவமாகப் பிரதோஷம், கார்த்திகை, திருவாதிரை, பௌர்ணமி ஆகியன உண்டு. வருடாந்த அலங்கார உற்சவம் 10 தினங்களாகச் சிறப்பாக இடம்பெறும்.