வள்ளி மடத்தடி விநாயகர் ஆலயம்.

இவ்வாலயம் வடக்குத் திசையில் கடலை அண்டியிருக்கிறது. இன்று வன்னியர் கோயில், விநாயகர் என்பது மரபு. ஒரு முறை மாதகல் சிற்றம்பலப் புலவர் இந்தியாவிற்கு யாத்திரை சென்ற காலத்தில் வழியில் கால் தடக்க நின்று பார்த்த பொழுது விநாயகர் சிலையைக் கண்டு அதை எடுத்துப் பக்கத்திலுள்ள வன்னி மரத்தடியில் வைத்துச் சென்றார். பின் அவர் இலங்கைக்குத் திரும்பி வரும்போது அந்தச் சிலையைக் கொண்டு வந்து கோயில் கட்டுவித்து அதில் பிரதிஸ்டை செய்தார் என்பது வரலாறு.