வில்லூன்றி ஸ்ரீ வீரகத்திப் பிள்ளையார் கோவில்

இராமபிரான் தனது வில்லை ஊன்றி ஏற்படுத்திய நன்னீர் ஊற்றினை உடையமையால் இப்பதி வில்லூன்றி எனப் பெயர் பெற்றது. இராமபிரான் சிவபூசை செய்த இடமாதலால் பூர்வ தனுஸ்கோடி எனக் கருதப்படுகின்றது. முற்காலத்திலே சிவாலயம் ஒன்று இருந்ததாக ஐதீகம். பின்னர் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட விநாயகர் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டார். நூறு வருடப் பழமை வாய்ந்த கல்வெட்டுக்கள், சாசனங்கள், திருவூஞ்சற் பாடல்கள் இங்கு உள்ளன. மூலமூர்த்தி வீரகத்தி விநாயகர். தினமும் ஆறுகாலப் பூசைகள் நடைபெறுகின்றன. வைகாசி அமாவாசையை இறுதி நாளாகக் கொண்டு பத்து தினங்கள் வருடாந்த மகோற்சவம் நடைபெறுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றையும் கொண்ட பெருமைபெற்ற ஓர் ஆலயம் இதுவாகும்..