ஸ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் கோவில் பலாலி வீதி கோண்டாவில்

1880 ஆம் ஆண்டு கோண்டாவில் கிழக்குச் சந்தியில் இருந்த மடத்தில் ஆரம்பமாகிப் பின்னர் ஆலயமாக ஸ்தாபிக்கப்பட்டது. மடம் இருந்த இடத்தில் கந்தபுராணப்படிப்பு நடைபெற்று வந்தது. வேல் ஒன்று வைத்துப் பூசை செய்யப்பட்டதாக வரலாறு உண்டு. 1965 ஆம் ஆண்டளவில் இந்த மடம் இருந்த இடத்தில் ஆலயம் ஒன்று அமைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு அதற்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் 1972 ஆம் ஆண்டு புனருத்தாரணம் செய்யப்பட்டு அரசடிப் பிள்ளையார் என்றும், ஆசிமட விநாயகர் என்றும் அழைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலமூர்த்தி – விநாயகர். தினமும் காலை, மாலைப் பூசைகள் நடைபெறுகின்றன. ஆவணிச் சதுர்த்தியில் முடிவடையும் வண்ணம் அலங்கார உற்சவம் நடைபெற்று வருகின்றது. கார்த்திகையில் 21 நாட்களுக்கு பெருங்கதைகள், தொடர்ந்து அபிஷேகமும் நடைபெற்று வருகின்றது.