ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் கோண்டாவில்

மூலமூர்த்தி – பிள்ளையார். பரிவார மூர்த்தி – சந்தான கோபாலர். 1973 ஆம் ஆண்டு வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தல விருட்சம் வில்வமரம். சிவயோக சுவாமிகள் இந்த ஆலயத்தில் முன்னரெல்லாம் தங்கிச் செல்வதுண்டு. வைகாசி மாதத்து சுவாதி நட்சத்திரத்தை இறுதியாகக் கொண்டு 12 நாள் அலங்கார உற்சவம் நடைபெற்று வருகின்றது. திருவூஞ்சல், பஞ்சமுக அர்ச்சனை ஆகியனவும் நடைபெறுகின்றன. பிள்ளையார் கதை, திருவெம்பாவை அந்தக்காலங்களில் படிக்கப்பட்டு வருகின்றன. ஐப்பசி வெள்ளி, கந்தசஷ்டி, திருவாதிரை, மாசிமகம் ஆகிய விசேட தினங்களில் விசேட பூசை வழிபாடுகளும் நடைபெறும். இந்தக் கோவில் செகராஐசேகரனால் தாபிக்கப்பட்டது எனத் தெரிய வருகின்றது. கோவிலுக்கான பாடல்களும் உண்டு. தினமும் இருகாலப் பூசை நடைபெற்று வருகின்றது.