ஆகாயக்குளம் பிள்ளையார்

ஆகாயக்குளம் பிள்ளையார் கோவில்


இது மிகப் பழமை வாய்ந்த கோவில். ஆகாயன் என்ற அரசன் இக்கோவிலின் பக்கத்தில் ஒரு குளத்தைக் கட்டினான். அவனது பெயரை நினைவூட்டும் வகையில் ஆகாயக் குளம் என்ற பெயர் இடப்பட்டதாகவும் ஆலயத்திற்கும் அதே பெயரை வைத்து அழைத்ததாகவும் கர்ண பரம்பரைக்கதை உண்டு. டச்சுக்காரர் காலத்தில் அழிவுறாமல் தவிர்க்கப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகின்றது. மாதாவின் கோவில் எனவும் அழைக்கப்பட்டு வருகின்றது. இப்பெயர் இன:றும் கிராமத்தவர் மத்தியில் பிரபல்யமாக இருந்து வருகிறது. நித்திய நைமித்திய பூசைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சித்திரா பௌர்ணமி அன்று தீர்த்த உற்சவத்துடன் மகோற்சவம் முடிவடைகின்றது. திருவெம்பாவை, சிவராத்திரி, நவராத்திரி, கந்தச~;டி, பிள்ளையார் கதை போன்றவை விசேட தினங்களாகும். புராணம் படிக்கும் வழக்கம் இன்றும் இங்கு இருந்து வருகிறது. விநாயகர் புராணம், திருச்செந்தூர் புராணம் படிக்கப்பட்டு வருகின்றன. கந்தபுராணப் படிப்பு தைப்பொங்கல் தினத்தன்று ஆரம்பமாகி பங்குனி உத்தரத்தன்று பூர்த்தியாகும்.

Add your review

12345