இணுவில் கந்தசாமி கோவில்

இணுவில் கந்தசாமி கோவில்


இவ்வாலயம் ஒல்லாந்தர் காலத்தையது. ஆதியில் மூலமூர்த்தியாக வேல் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது. பின்னர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும் பிரதிஷ்;டை செய்யப்பட்டார். பரிவார மூர்த்திகளாக கல்யாண வேலவர், சிவலிங்கம், ஸ்ரீ நடராஐ மூர்த்தி, சந்திரசேகரர், முத்துக்குமாரசுவாமி, சந்தானகோபாலர், தண்டாயுதபாணி, உற்சவ வைரவமூர்த்தி, வைரவர் ஆகிய மூர்த்திகள் வீற்றிருக்கின்றனர். தினம் 5 காலப் பூசைகள் நடைபெறுகின்றன. ஆனி அமாவாசையைத் தீர்த்த தினமாகக் கொண்டு முதல் 25 நாட்களுக்கும் மகோற்சவம் நடைபெறும். திருக்கல்யாண விழாவையடுத்து பூங்காவனத் திருவிழாவும் நடைபெற்று வருகின்றன. இந்தியக் கலைஞர்களால் நிர்மாணிக்கப்பட்ட மிகப் பழைய மஞ்சம் இவ்வாலயத்திலுண்டு. வருடாவருடம் கந்தபுராணம் படிக்கப்படும்.