பூசை அம்மன் ஆலயம் – இடைக்காடு

பூசை அம்மன் ஆலயம் – இடைக்காடு


இது 19ம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் இருந்து வழிபட்டு வரப்படுகின்றது. ஆரம்பத்தில் இக்கடவுளை பச்சிலைப்பள்ளி சயம்பு வள்ளிப்பிள்ளை அவர்களால் பச்சிலைப்பள்ளியில் வைத்து வணங்கப்பட்டது. பின்னர் பிள்ளைகளான செல்லையா, பார்வதிப்பிள்ளை அவர்கள் இடைக்காட்டிற்கு வண்டிலில் வந்த போது அவர்களுடன் கூடிக்கொண்டு வந்துவிட்டது. இவ் அம்மனுக்கு உருவம் இல்லை எனினும் அம்மனின் சொத்தாக ஒரு செம்பும் குத்துவிளக்கும் இருந்தது. செல்லையா, பார்வதிப்பிள்ளை அவர்களால் செம்பு குத்துவிளக்கு என்பன எடுத்து வரப்படும் போது அம்மனும் சேர்ந்து வந்தது. பள்ளிகலட்டியில் உள்ள செல்லையாவின் வீட்டு சுவாமி அறையில் தங்கியிருந்தது. பின்னர் கனவில் தோன்றி வீட்டுக்கு மேற்குப் புறத்தில் உள்ள வேப்பமர நிழலில் கோவில் கட்டச்சொன்னது. இதன்படி சிறிய கொட்டிலொன்று கட்டப்பட்டது. பின்னர் கட்டடமாக்கப்பட்டது. இவ்வம்மனுக்கு உருவம் இல்லாததால் மனதால் நினைத்து வழிபடப்படுகிறது. இவ் அம்மனை பக்தியோடு வழிபடுபவர்களுக்கு எந்த குறைகளும் ற்படுவதில்லை. தற்போது சிவஞானசுந்தரம் அவர்களாலும் குடும்பத்தவராலும் பராமரிக்கப்பட்டு வருகின்றது. திருவிழா தினமாக கொண்டாடப்படுவதில்லை. எனினும் பெரும்பாலான விசேட தினங்களில் படையல் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வம்மன் பரம்பரைக்கடவுளாக வழிபட்டு வரப்படுகின்றது. இன்றும் உருவமற்ற கடவுளாக அருள் பாலித்துக் கொண்டிருக்கின்றார்.