ஏடு – எழுத்தாணி

ஆதி காலத்தில் மனிதர்கள் தங்களின் எண்ணங்களையும் தேவைகளையும் சைகைகளின் மூலம் வெளிப்படுத்தினர். அதன் பின்னர் தங்களுக்கென விஷேட மொழிகளை உருவாக்கி உரையாடலின் மூலம் தொடர்புகளையும் தகவல் பரிமாற்றத்தையும் மேற்கொண்டனர். இப்போதும் கூட செவி வழியாக வந்த கதைகள் என நிறையக் கதைகள் உள்ளன. இவையெல்லாம் அந்தக் காலத்தில் ஆவணப்படுத்துவதற்குரிய தகுந்த முறைகள் இல்லாமையால் ஏற்பட்டது. பின்னர் ஆவணப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஏடு ஆகும். இது பனை ஓலையால் செய்யப்படுகின்றது. எனினும் தற்போது கடதாசிகள் உருவாக்கப்பட்டமையால் இதன் பாவனை அற்றுப் போய் விட்டது. இந்த ஏட்டில் எழுத்துக்களை பொறிப்பதற்கு எழுத்தாணி என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இன்று மறந்து போன பாவனைப் பொருளாகி விட்டது.