கட்டுமரம்

யாழ்ப்பாண தீவகற்பம் மூன்று புறமும் கடல் சூழப்பட்ட பிரதேசமாகும். அது மட்டுமல்ல பல சிறிய தீவுக் கூட்டங்களையும் கொண்டமைந்துள்ளது. கண்ட மேடைப்பரப்பாக உள்ளதால் பெருமளவு கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. மீன் பிடி துறையில் இன்று பாரிய வளர்ச்சிகள் ஏற்பட்டு றோலர்கள், நவீன உபகரணங்கள் மூலம் பிடிக்கப்படுகிறது. எனினும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பாரம்பரிய முறைகள் பாவிக்கப்படுகின்றன. பொறிகள் மூலம், கரைவலை மூலம், கூரிய தடி அல்லது கம்பியால் குத்திப் பிடித்தல மூலம், கட்டு மரம் மூலம், பாய்மரக்கப்பல் மூலம், கன்னார் படகு மூலம் என பல வழிகளில் மீன் பிடி மேற்கொள்ளப்படுகிறது.
கட்டு மரத்தைப் பொறுத்தளவில் மிதக்கும் தகவுடைய, பாரம் குறைந்த மரங்களை பிணைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது. இதற்கு துடுப்புகளை வலிப்பதன் மூலம் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. துடுப்புகள் கரண்டி வடிவில் தட்டையாக்கப்பட்ட பலகையால் செய்யப்படுகிறது.
இதுவும் ஒரு பாரம்பரிய கட்டமைப்பாகும். இன்றும் நம் பிரதேசங்களில் சில இடங்களில் காணக்கூடியதாக உள்ளது.