கல் வேலி / பகிர்

ஆரம்ப காலங்களில் பணிர் செய் நிலங்களை கால் நடைகளிலிருந்து பாதுகாப்பதற்காக கற்களை அடுக்கி வேலி அமைக்கும் முறை இருந்தது. அது மட்டுமல்லாமல் வளவுகளையும் இவ்வாறு தான் ஒழுங்குபடுத்தினார்கள்.

முருகைக்கற்கள், சுண்ணக்கற்களால் அல்லது கண்ட கற்களால் அமைக்கப்படுகிறது. தற்போதும் இக்கல் வேலிகளை இடைக்காடு, நெடுந்தீவு பிரதேசங்களில் காணக்கூடியதாக உள்ளது. கிணறு, கட்டடங்களின் சுவர்களைக் கூட இவ்வாறுதான் ஆரம்ப காலங்களில் அமைத்தார்கள். இன்றும் மறக்க முடியாத சின்னமாக உள்ளது.

Add your review

12345