கொட்டப் பெட்டி

இது பனையோலையால் பின்னப்பட்ட சிறிய கைப்பையாகும். இது போலப் பின்னப்பட்ட பெரிய பைகளும் முன்னர் பாவிக்கப்பட்டன. கொட்டப்பெட்டி பனையோலை, தென்னை ஓலை, புல், வாழை நார் என்பவற்றிலும் பின்னப்படுகின்றது. நவீன காலத்தில் பிளாஸ்ரிக், பொலித்தீன் போன்ற சூழலுக்கு ஒவ்வாத பாவனைப் பொருட்கள் அதிகரிப்புடன் கலாச்சார மாற்றங்களும் இவ் அரிய பொருட்களின் பாவனையை வெகுவாகக் குறைத்துள்ளது. இக் கொட்டப் பெட்டிகள் பணம், நகைகள் என்பவற்றை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு பாவிக்கப்பட்டது.
எங்கட பூட்டாச்சி கொட்டப்பெட்டியை திறந்து பத்து சதம் காசை எடுத்து, பொக்கை வாயைத் திறந்து “மோனே அயத்துப் போகாம வெத்தில வாங்கி வா” எண்டு சொன்னது இப்பவும் மனதுக்கு இதமான அனுபவமாக இருக்கிறது.

Add your review

12345