தட்டுவம்

தட்டுவம்

எமது முன்னோர்கள் உணவு உண்ணுவதற்கு தட்டுவம் என்ற இந்த அமைப்பை  பயன்படுத்தினர். இதே போல பனை ஓலையை கொண்டு பல பொருட்களை தயாரித்து எம் முன்னோர்கள் பாவித்தனர். இது உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியமாக இருந்தது. தற்போது உலோகங்களால் ஆன தட்டுகள், கோப்பைகள் என பல உபகரணங்களை பாவிப்பதால் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகின்றன. தற்போது கூட சில விஷேட நிகழ்வுகளில் வாழை இலையில் உணவு பரிமாறப்படுகிறது. இதற்கும் காரணம் உள்ளது. நாம் உணவு உண்ணும் போது மன அமைதியுடனும் விருப்பத்துடனும் உண்ண வேண்டும். வாழை இலையில் சாப்பிடும் போது கண்ணுக்கு குளிர்மையாகவும், சூடான அமிலமான உணவுகள் வாழை இலையுடன் தாக்கமடையாமலும் இருப்பதால் ஆரோக்கியமாக இருக்கும். பனை ஓலையில் பின்னப்படும் பிளா சம்பந்தமாக கடடடுரை ஒன்று முன்னர் வழங்கப்பட்டிருந்தது.

 

By – Shutharsan.S