திண்ணை

இது சுமார் நூறு வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான மண்ணாலான வீடொன்றின் முகப்பாகும். திண்ணை விருந்தினர்கள் மட்டுமல்லாமல் சாதாரண பயணிகள் கூட இருந்து இளைப்பாற வசதியாக அமைந்துள்ளது. திண்ணையின் நடுவிலுள்ள நடை எனப்படும் நடைபாதை, உள் முற்றம் என்பவற்றுடன் காணப்படும் வீட்டை ஒத்த பௌதீக கட்டுமானங்கள் நமது பண்பாட்டின் கடந்து சென்ற கோலங்களை வெளிக்காட்டுகிறது. பண்பாடு மட்டுமல்லாமல் பொது நோக்கமும் கலந்த இவ்வாறான கட்டமைப்புகளை வளர்ப்பதன் மூலமே நம் சமூக முன்னேற்றத்திற்கு உதவ முடியும்.
நன்றி : நுண்கலைத்துறை, யாழ் பல்கலைக்கழகம்,
உதயன் நாளிதழ்