நாகர்கோவில்

நாகர்கோவில் பிரதேசத்தில் கருமணற்பிட்டி வரலாற்றில் இடம்பிடித்த முக்கிய இடமாகும். அத்துடன் கொம்புள்ள கலசமும் இங்குள்ளது. இக்கோவிலில் கோபுர விதானத்தில் ஒரு கப்பல் உருவமும் அதில் ஒரு பெண்மணி இருப்பது போலவும் கொடித்தம்பத்தில் நாகபாம்பும் இரு போர்வீரங்களின் உருவ சிலையும் நாயும் அமைந்தது போலுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் நாகர்கோவில் பகுதியில்
வசித்த 1000 ற்கு மேற்பட்ட பொதுமக்களை போர்த்துக்கீஸர் கப்பலில் ஏற்றி இந்தியாவின் கோவாவிற்கு கொண்டு செல்ல முற்பட்ட போது மக்கள் “ நாகதம்பிரானே எங்களை காப்பாற்று என்று இறைஞ்சினார்கள்” அப்போது பாய்மர கப்பலின் உச்சியில் நாகபாம்பு தோன்றி மிகப்பெரிய சத்தம் எழுப்பியபோது போர்வீரர்கள் சுட 1000 துண்டாக சிதறி 1000 பாம்புகளாக வெளிவந்தது. இதைப்பார்த்து பயமடைந்த வீரர்கள் மக்களை இறக்கினார்கள். எனினும் ஒரு பெண்ணை கப்பலில் மறைத்து வைத்தார்கள். அப்போது பாம்பு இறங்காமல் கொடிக்கம்பத்தில் இருந்தது. பின்னர் அப்பெண்ணையும் இறக்கிய பின்னரே பாம்பும் இறங்கியது. அவ்வாறு வரலாற்று பெருமை மிக்க நாகதம்பிரானை நாம் வணங்கி சகல சௌபாக்கியங்களும் பெற வேண்டும். இந்த நிகழ்வை ஞாபகமாக கொண்டாட இன்றும் கப்பற் திருவிழா கொண்டாடப்படுகிறது. தற்போது கூட பெருமளவு நாக பாம்புகள் படையெடுத்து அருகிலுள்ள போர்வீரங்களை துரத்தியது என்பது அதன் பெருமையை பறை சாற்றுகிறது.
நன்றி : தகவல் – பேராசிரியர் செ.கிருஷ்ணராஜா, வரலாற்றுத்துறை, யாழ் பல்கலைக்கழகம்.
படங்கள் – மதீபன், கோண்டாவில்

1 review on “நாகர்கோவில்”

  1. thaju சொல்கின்றார்:

    மிகவும் பயன் உள்ள தகவல்.