நாற்று நடுகை, சூடு மிதித்தல்

எமது பிரதேசங்களில் நெற்செய்கையும் நீண்ட காலமாக நடைபெறுகின்றது. இது பிரபலமடைய முன்னர் வரகு, கம்பு, இறுங்கு, கேழ்வரகு என்பன பிரதானமான உணவுகளாகப் பாவிக்கப்பட்டது. நெற்செய்கையில் காலபோகம், சிறுபோகம் என்ற இரண்டு காலங்களில் செய்கை பண்ணப்படுகின்றது. வயலைப் பண்படுத்தி விசிறல் மூலமாகவோ அல்லது நாற்று நடுகை மூலமாகவோ பயிரிடப்படுகின்றது. பின்னர் களை பிடுங்கல், தண்ணி கட்டுதல், பசளையிடுதல் என்பவற்றினூடாக விளைந்த நெற்கதிர்கள் வெட்டப்பட்டு நவீன இயந்திரங்கள் மூலமாக நெல் பிரித்தெடுக்கப்படுவது தற்போதைய முறையாகவுள்ளது. எனினும் கிராமப்புறங்களில் நெற்சூடு வைக்கப்பட்டு மாடுகளைக்கொண்டு மனித வலுவால் சூடு அடித்தல், சுளகைப் பாவித்து இயற்கைக் காற்றிலே தூத்துதல், தலைப்பாகை கட்டுடன் உரமேறிய உடலுடன் விவசாயிகளின் வேலை போன்ற செயற்பாடுகள் எம்மை இதமான ஒரு அனுபவத்திற்கு இட்டுச் செல்கிறது.

நன்றி: படங்கள் – எஸ்.சுசாகரன்