பனம் பணியாரம்

பனம் பணியாரம்
யாழ்ப்பாணத்து உணவு வகைகளில் தனித்துவமானது இந்த பனம் பணியாரமாகும். நன்னு பழுத்த பனம் பழத்தை எடுத்து தோல் நீக்கி பினைந்தெடுத்த கூழை சீனியும் கோதுமை மாவும் கலந்து இறுக்கமான பதமாக எடுத்து சிறு சிறு உருட்டைகளாக கொதிக்கும் எண்ணெயில் போட்டு பனம் பணியாரம் செய்யப்படுகிறது. சுட்ட பணியாரத்தை உடனே சாப்பிட்டால் ஒரு கயர்ப்பு தன்மையாக இருக்கும். நல்லாக ஆறவிட்டபின் அல்லது அடுத்த நாள் சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். இது எல்லாம் யாழ்ப்பாணத்தின் தனிச்சிறப்பானது மட்டுமல்ல உடல் ஆரோக்கியமானதும் ஆகும்.

By – Shutharsan.S