பழமையான கற்தொட்டி

பண்டைய காலங்களில் எம்முன்னோர்கள் பண்பாட்டிலும் தொழில்நுட்பத்திலும் சிறப்பாக விளங்கியுள்ளனர். அவ்வாறான எச்சத்தை இன்றும் காணக்கூடியதாக உள்ளது. இந்த வகையில் மனித தேவைகளுக்காக, விவசாய தேவைகளுக்காக, கால்நடைகளின் தாகத்தை தீர்ப்பதற்காக நீரை சேமித்து வைக்கக்கூடிய வகையில் பெரிய கல்லை செதுக்கி நீர்தொட்டிகளை அமைத்துள்ளனர். ஆலயங்கள், சனசமூக நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இவற்றைப் பெரும்பாலும் காணலாம்.