பாக்கு வெட்டி

பாக்கு வெட்டிஎம் முன்னோர்களின் அற்புதமான கண்டு பிடிப்புகளில் பாக்கு வெட்டி ஒன்றாகும். பாக்கை வெட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட இக்கருவி பல்வேறு வடிவங்களில் கலை நயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. விருந்துகளுக்குச் சென்றால் கண்டிப்பாக வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறுவார்கள். பாக்கில் உள்ள குரோமியம் உப்பு திடீரென்று வரும் மயக்கத்தையோ, இரத்தக் கொதிப்பையோ வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. எப்போது அதிகம் சாப்பிட்டாலும் பாக்கு மட்டுமாவது சாப்பிடவும். பாதாம்பருப்பு, வால்நைட் பருப்பு முதலியவற்றை முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அளவுடன் தினமும் தவறாமல் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் குரோமியம் உப்பு குறையாமல் இருக்கும். இரத்தக் கொதிப்பு, ஸ்ட்ரோக் முதலியவை அண்டாது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இந்த மூன்று உணவுகளையும் சேர்த்து வரலாம்.

முழுப்பாக்கை வெட்டி வெத்திலையில் வைத்து மடித்து சிறிது சுண்ணாம்பு, புகையிலை துண்டும் சேர்த்து மெல்லும் வழக்கம் இன்றும் சில நிகழ்வுகளில் காணக்கூடியதாக உள்ளது. மறக்க முடியாத இந்த பாக்கு வெட்டியின் பாவனை தற்போது குறைந்து விட்டது எனினும் கிராமப்புறங்களில் முதுசமாக இன்றும் பாவிக்கிறார்கள்.

 

By – Shutharsan.S

படங்கள்: நன்றி கூகுள் இமேஜ்.

6 reviews on “பாக்கு வெட்டி”

 1. srikanthaluxmy சொல்கின்றார்:

  உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகின்றேன். தமிழரின் பாரம்பரியங்களைப் பதிவாக்கும் சிறுசிறு முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். முடிந்தால் தொடர்பு கொள்ளவும்.

 2. செந்தூரா சொல்கின்றார்:

  மறக்க முடியாத தகவல்

  நன்றி

 3. சுதர்சன் சொல்கின்றார்:

  நன்றி ஸ்ரீகாந்தலட்சுமி எனது மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளலாம். shuthan@gmail.com

 4. சுதர்சன் சொல்கின்றார்:

  நன்றி செந்தூரா

 5. யசோதா சொல்கின்றார்:

  இந்தப் படங்களுடன் பாக்குவெட்டி பற்றிய பதிவு ஏற்கனவே http://www.eelamlife.blogspot.com என்ற முகவரியில் தொகுக்கப் பட்டிருக்கிறது.

 6. சுதர்சன் சொல்கின்றார்:

  இது மட்டுமல்லாமல் jaffnaheritage.blogspot.com and google image பக்கங்களிலும் சில தகவல்கள் உள்ளது. எனது தளத்தில் தொகுத்து ஒரு தகவல்களஞ்சியமாக ஆக்குவதற்காக இடப்படடுள்ளது. தங்களிடம் மேலதிக தகவல்கள் இருப்பின் எனக்கு தெரியப்படுத்தினால் மிகவும் சிறப்பாக அமையும்

  நன்றி
  யாழ்ப்பாணம் இணையம்