புராணம்

புராணம் என்ற சொல், தமிழ் மொழியில் மணிமேகலை தோன்றிய காலத்திலேயே வழங்கப் பெற்றுள்ளது என அறிய முடிகிறது.

புராணம் புராணவித், புராணி போன்ற சொற்கள் ரிக் வேதத்திலும் அதர்வன வேதத்திலும் காணப்படுகின்றன. எனினும் இச் சொற்கள் புராணத்தைக் குறிக்கவில்லை. பழமையானவன், பழமையைப் பரப்புகிறவன் என்ற பொருளிலேயே இச்சொற்கள் வழங்கியிருக்கின்றன.”புராணம் என்கிற வடசொல், புரா-நவ என்ற இருவேர்களில் இருந்து பிறந்தது. இதன் பொருள் பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் உள்ளது என்பர். புராணத்திற்கு இணையாக ஆங்கிலத்தில் Myth என்ற சொல் வழங்கப்படுகிறது. ‘Mythos’ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது.

வேதவியாசர் புராணக்கதைகளைக் கூறுகிறார். அவற்றைக் கேட்ட சூதமுனிவர் அக்கதைகளை சவுனக முனிவர்களுக்கு எடுத்துரைக்கிறார். புராணங்களை எடுத்துரைத்த இடம் நைமிசாரண்யம் ஆகும்.
இத்தலம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் (பத்துப் பாசுரங்கள்) செய்யப்பெற்றது.
நைமி அல்லது ​நேமி என்றால் சக்கரம் என்றும், ஆரண்யம் என்றால் அடர்ந்தகாடு என்றும் பொருள்.

By -‘[googleplusauthor]’

 

 

நன்றி- மூலம்- விக்கிபீடியா இணையம்