மத்து

விஷேட நிகழ்வுகளிலும் அன்றாட பாவனைக்கும் பசு நெய்யை நாங்கள் பாவிக்கிறோம். இது பசுப்பாலை புளிக்க வைத்து அதில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. நன்கு காய்ச்சிய பாலை ஆறவிட்டு இளஞ்சூட்டில் உறையை (ஏற்கனவே உள்ள தயிர் – நன்மை பயக்கும் பக்ரீரியாவுக்காக) இடும் போது தயிராக மாறுகிறது. இதைக் கடைந்து வெண்ணெய் எடுக்கப்படுதிறது. இந்த வெண்ணையை சூடாக்கி நெய் ஆக்கப்படுகிறது. பெருமளவு போசாக்கும் மருத்துவ குணமும் உள்ள தயிர், நெய் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. தயிரைக் கடைவதற்கு இந்த மத்து
பாவிக்கப்பட்டது. மண்பானையில் தயிரை வைத்து மத்தால் கடையும் போது வெண்ணெய் பிறக்கிறது. தற்போது காய்ச்சாத பாலில் இருந்தே வெண்ணெய் பிரித்தெடுக்கும் உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு விட்டது.

Add your review

12345