வி.ஜீவகுமாரன்

Sharing is caring!

யாழ். சங்கானையை பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட வி.ஜீவகுமாரன் அவர்கள் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

ஆங்கில இலக்கிய கல்வியிலும், தமிழ் புனைகதை இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்ட இவர் 1988ம் ஆண்டு தொடக்கம் டென்மார்க் அரச நூலகத்தில் வெளிநாட்டவர்களுக்கான பிரிவில் தமிழ் பகுதியின் பொறுப்பாளராகவும் ஆலோசகராகவும் கடமை ஆற்றுகின்றார்.  மேலும் கணனித்துறையில் தேர்ச்சி பெற்று டென்மார்க் நகரசபை ஒன்றில் புவியியல் சார்ந்த தொழில் நுட்பப்பிரிவின்(GIS – Geographic Information System) பொறுப்பாளராக விளங்குகின்றார்.

இரட்டைப் பெண் பிள்ளைகளுக்கு தந்தையான இவர் 2008ல் தனது 50 வது வயதில் ”யாவும்கற்பனைஅல்ல”என்ற சிறுகதை–கவிதை – உரை வீச்சு தொகுப்பின் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமான அவர் பின்வரும் நூல்களை வெளியிட்டுள்ளார்.

மக்கள்மக்களால்மக்களால் என்ற நாவல் இலங்கை தமிழியல் விருது 2010 ஆல் கௌரவிக்கப்பட்டது. சங்கானைச்சண்டியன் என்ற 10 சிறுகதைகளும் 2 குறுநாவல்களின் தொகுப்பு சின்னப்பபாரதி விருதினால் 2011ம் ஆண்டு கௌரவிக்கப்பட்டது. இதில் இடம்பெற்ற ”கிராமத்துபெரியவீட்டுக்காரி, ”அகாலமரணம்என்ற சிறுகதைகள் இலங்கை தகவம் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினால் முதலாவது, மூன்றாவது பரிசுகளை 2010ல் பெற்றன.

இவரது மனைவியார் திருமதி. கலாநிதி ஜீவகுமாரனால் டெனிஸ் மொழியில் எழுதப்பட்ட Kærlig hilsen…mor என்ற உரைவீச்சில் அமைந்த நாவல் இவரால் ”இப்படிக்குஅன்புள்ளஅம்மா”என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டு சிறந்த மொழிபெயர்ப்பிற்காக தமிழியல் விருது 2011 ஆல் கௌரவிக்கப்பட்டது.
அவ்வாறே ”மாங்கல்யம்தந்துதானே”, ”நாணயம் ஆகியன 2012ல் இரு முதல் பரிசில்களைப் பெற்றுள்ளது

மேலும் டென்மார்க்கில் வாழும் இளைய சந்ததியினர் இணையத்தளங்களில் எழுதிய கவிதைத்தொகுப்பை ”மெல்லத்தமிழ்இனித்துளிர்க்கும்” என 2008ல் தொகுத்து வெளியிட்டார்.

மேலும் 2011ல் இலங்கையில் நடைபெற்ற எழுத்தாளர் விழாவை ஒட்டி புலம்பெயர்வு வாழ்வின் எழுச்சிகளையும், வீழ்ச்சிகளையும், நிதர்சனங்களையும் காட்டும் வகையில் 18 நாடுகளில் வாழும் 50 எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து ”முகங்கள்”என்ற தொகுப்பாக வெளியிட்டார்.

1998ம் ஆண்டுக்காலகட்டத்தில் டெனிஸ்-ஆங்கிலம்-தமிழ் ஆகிய மொழிகளில் ஒரு வைத்திய கையேடும் அகராதியும் இணைந்த ஒரு தொகுப்பை வெளியிட்டார்.

நினைவுநல்லதுவேண்டும்”என்ற கொள்கையுடன் பல  நூல்களை இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கும் நூலகங்களும் தன்னுடன் பணிபுரியும் எழுத்தாளர்களின் அனுமதியுடன் இலவசமாக வழங்கி வருகின்றார்.

”சமகால இலக்கியம், இலக்கிய பிரச்சனைகள் பற்றி அடிக்கடி சுமார் 6000 மின்னஞ்சல் வாசகர் வட்டத்துடன் தனது தொடர்பை பேணி வருகின்றார்.

தொடர்ந்து பல சஞ்சிகைகள், பத்திரிகைகள், இணையத்தளங்களில் எழுதிவரும் இவர் ”சொல்லுக்கும்எழுத்துக்கும்” இடைவெளியில்லாது வாழ்தலை தனது குறிக்கோளாக கொண்டுள்ளார்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyrights © 2008-2023 ourjaffna.com